தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்;- தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி இல்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று கூறினார். ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்தது திமுக தான், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது. நெடுவாசலில் பொய் பிரச்சாரம் செய்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர். 

முதல்வர், அமைச்சர்களை பற்றி எதை வேண்டுமானாலும் சொல்லி அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார்கள். எதிர்கட்சியினர் எவ்வளவு அவதூறு செய்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்றார். முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Source: AsianetTamil

Author Image
Kundralan M