சாமர்த்தியமான மின்னல் வேக ஸ்டம்பிங்.. தோனியை நினைவுபடுத்திய அண்டர் 19 மட்டையிலக்கு கீப்பர்.. காணொளி

சாமர்த்தியமான மின்னல் வேக ஸ்டம்பிங்.. தோனியை நினைவுபடுத்திய அண்டர் 19 மட்டையிலக்கு கீப்பர்.. காணொளி

அண்டர் 19 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இதன் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர வேறு யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் சிறப்பாக ஆடி 88 ரன்களை குவித்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி 177 ரன்களை அடித்தது. அவரும் சரியாக ஆடியிருக்கவில்லையென்றால், இந்த ஸ்கோர் கூட வந்திருக்க முடியாது. 177 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. 

178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்து கொடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் 105 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது வங்கதேச அணி. ஆனால் அந்த அணியின் கேப்டன் அக்பர் அலியின் பொறுப்பான பேட்டிங்கால் அந்த அணி இலக்கை அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக அண்டர் 19 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. 

இந்த போட்டியில், தோனியை நினைவுபடுத்தும் விதமாக, ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் தோனியை மாதிரியே சாமர்த்தியமாக ஒரு ஸ்டம்பிங்கை செய்தார் அண்டர் 19 விக்கெட் கீப்பர் ஜுரேல். ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் வீசிய 17வது ஓவரின் முதல் பந்தை ஷஹாதத் ஹுசைன், தடுத்தாடினார். அப்போது அவரது கால் கிரீஸை விட்டு சற்று நகர்ந்தது. பந்தையும் அவர் சரியாக தடுத்தாடவில்லை. அதனால் பேட்டில் பட்டு பின்பக்கம் விக்கெட் கீப்பரிடம் சென்றது. அந்த பந்தை ஒற்றை கையில் பிடித்து அதிவேகமாக, தோனியின் ஸ்டைலிலேயே ஸ்டம்பிங் செய்தார் ஜுரேல். அவர் ஸ்டம்பிங் செய்த விதம், ஸ்டைல் அனைத்துமே தோனியை மாதிரியே இருந்தது. அவரது க்ளௌஸ் கூட தோனி மாதிரியே தான் போட்டிருந்தார். அந்த வீடியோ இதோ…

Source: AsianetTamil

Author Image
Kundralan M