அப்பான்னு சொல்ல வெட்கமா இல்ல! அசிங்கப்படுத்திய நபர்:  நச் பதிலடி கொடுத்த ராதிகா மகள் ரேயான்!

அப்பான்னு சொல்ல வெட்கமா இல்ல! அசிங்கப்படுத்திய நபர்: நச் பதிலடி கொடுத்த ராதிகா மகள் ரேயான்!

90 களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் சரத்குமார். சமீப காலமாக,  ஹீரோவாக நடித்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், இப்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில்,  மல்டிஸ்டார் படமாக உருவாகியுள்ள ‘வானம் கொட்டட்டும்’ படத்தில், சூரிய வம்சம் படத்திற்கு பின், தன்னுடைய மனைவி ராதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த ராதிகாவின் மகள் ரேயான் தன்னுடைய தந்தைக்கு உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது அப்பா… என உருக்கமான செய்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

குறிப்பாக… இந்த படத்தில் உங்களை பார்ப்பது என்னை ஒருவித உணர்ச்சிவசப்படுத்தியது – நான் உங்களை கட்டிப்பிடித்து ஐ லவ் யூ என்று சொல்ல விரும்பினேன். நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இவரின் டிவிட்டை கிண்டல் செய்யும் விதமாக ஒரு நபர் மோசமாக விமர்சித்து, ட்விட் போட அதற்க்கு, மிகவும் கோவமாக, அவர் தன்னுடைய தந்தை தான் இப்போ என்ன பண்ண போற… என நச் பதிலடி கொடுத்துள்ளார்.
 

அம்மா ok அப்பா சொல்ல உனக்கு வேக்கம் இல்ல.. இவர் உன் அப்பாவா…..

— k .k . kumari (@kkkumari1) February 7, 2020

And Yes yen Appa Dhaan! Ippa enna panna porae?

— Rayane Mithun (@rayane_mithun) February 7, 2020

 

Source: AsianetTamil

Author Image
Kundralan M