நீ இனிமே சரிப்பட்டு வரமாட்ட கிளம்பு.. இந்திய அணியிலிருந்து தூக்கியெறியப்பட்ட வீரர்

நீ இனிமே சரிப்பட்டு வரமாட்ட கிளம்பு.. இந்திய அணியிலிருந்து தூக்கியெறியப்பட்ட வீரர்

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி தொடரை வென்றுவிட்டது. 

கடைசி போட்டி இன்று மவுண்ட் மாங்கனியில் நடக்கிறது. தொடரை இழந்துவிட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பிலும், நியூசிலாந்து அணி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பிலும் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ராகுலும் ஷ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக ஆடிவருகின்றனர். 

இந்த போட்டியில் 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. ஷர்துல் தாகூருக்கு பதிலாக ஷமியும் கேதர் ஜாதவுக்கு பதிலாக மனீஷ் பாண்டேவும் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

கேதர் ஜாதவ் கடந்த போட்டியில் படுமோசமாக பேட்டிங் ஆடினார். அவருக்கு பவுலிங் வாய்ப்பும் கொடுக்கப்படுவதில்லை. அவர் பார்ட் டைம் பவுலராகவும் பயன்படுவார் என்பதால்தான் அணியில் இடம்பெற்று கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு இப்போதெல்லாம் பவுலிங்கும் கொடுக்கப்படுவதில்லை என்பதால் அவர் அணியில் தேவையில்லை. பேட்டிங்கின் அடிப்படையில் பார்த்தால் மனீஷ் பாண்டே தான் அணிக்கு தேவை என்பதால் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி:

பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஜடேஜா, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், சாஹல், பும்ரா. 

தோள்பட்டை காயத்தால் கடந்த 2 போட்டிகளில் ஆடாத நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்  அணிக்கு திரும்பிவிட்டார். 

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், ஹென்ரி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லேதம்(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிராண்ட் ஹோம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, கைல் ஜாமிசன், பென்னெட்.

 

Source: AsianetTamil

Author Image
Kundralan M