டெல்லி மண்ணில்  அமித்ஷாவை புரட்டி எடுத்த கொஜ்ரிவால்…!!  குஷியில் எகிறி குதிக்கும் ஸ்டாலின், மம்தா…!!

டெல்லி மண்ணில் அமித்ஷாவை புரட்டி எடுத்த கொஜ்ரிவால்…!! குஷியில் எகிறி குதிக்கும் ஸ்டாலின், மம்தா…!!

நாடே எதிர்நோக்கி காத்திருந்தார் டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 58 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது .  இந்நிலையில்  திமுக தலைவர் மு. க ஸ்டாலின் முதலமைச்சராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  சுமார் 70 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது ,   இதில் ஆம் ஆத்மி 58 இடங்கள் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது .  பாஜகவுக்கு 12 இடங்களும் காங்கிரஸ்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சி அமைக்கிறது .

விரைவில்  அரவிந்த் கெஜ்ரிவால் முதல் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் .  எப்படியாகிலும் டெல்லியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக பல்வேறு தேர்தல் வியூகங்கள் வகுத்து தேர்தலை எதிர்கொண்ட நிலைகள் பாஜகவுக்கு மரண அடி கிடைத்துள்ளது . இந்நிலையில் மூன்றாவது முறையாக முதலமைச்சராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு கட்சியினர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .  இந்நிலையில் டுவிட்டர் மூலமாக தனது வாழ்த்தை பதிவு செய்துள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் ,  வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் எனக்கு குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் நாட்டின் நலனுக்காக கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய அபிலாசைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் . இந்நிலையில் மேற்கு வங்க  மாநில முதலமைச்சரும்  மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் தலைவருமான மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .  மொத்தத்தில் டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவு என்று கூறியுள்ள மம்தா குடியுரிமை கொள்கை  நாட்டு மக்களால் நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு இதுவே சாட்சி என்றார் . வளர்ச்சி மட்டுமே வெற்றிக்கு கைகொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார் . 
 

Source: AsianetTamil

Author Image
Kundralan M