விஜய்யுடன் நடிக்க முதலில் மறுத்து… பின்னர் ஒப்புக்கொண்ட நடிகை… “தளபதி 65” பற்றி மக்கள் விரும்பத்தக்கது அப்டேட்…!

விஜய்யுடன் நடிக்க முதலில் மறுத்து… பின்னர் ஒப்புக்கொண்ட நடிகை… “தளபதி 65” பற்றி மக்கள் விரும்பத்தக்கது அப்டேட்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.டி.ரெய்டு, அரசியல் பிரச்சனை, மாஸ்டர் செல்ஃபி என விஜய் டுவிட்டரை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், தளபதி 65 பற்றிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தளபதி 65 படத்தை இயக்கப்போவது சிவகார்த்திகேயனின் நண்பரும் கனா படத்தின் இயக்குநருமான அருண் ராஜா காமராஜ் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் இமைக்காநொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கதமிழன் என நான்கே நான்கு படங்களில் நடித்துள்ள,  நடிகை ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது, அரண்மனை 3 படத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.  மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளாராம். முன்னதாக விஜய்க்கு தங்கையாக நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பிறகு அருண் ராஜா காமராஜிற்காக விஜய்க்கு தங்கையாக நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தளபதி 65 படம் 2021ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக விஜய் ஃபேன்ஸ் ஆருடம் சொல்லி வருகின்றனர். 

Source: AsianetTamil

Author Image
Kundralan M