தொடரும் ஆபாச பட வேட்டை..! மேலும் ஒருவர் அதிரடி கைது..!

தொடரும் ஆபாச பட வேட்டை..! மேலும் ஒருவர் அதிரடி கைது..!

ஆபாச படம் பார்ப்பவர்கள் உலகவில் இந்தியாவில் தான் அதிகமானோர் இருப்பதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று வெளியாகியது. அதிலும் தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை பலர் பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வந்தது. இதனையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆபாச படத்தை பரப்புபவர்களை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

இந்தநிலையில் நாமக்கல்லில் ஆபாச படம் பதிவிறக்கம் செய்து பரப்பியதாக தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கும் மாரபாளையத்தைச் சேர்ந்தவர் குருசாமி. சென்னையில் இருக்கும் ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்த இவர் தற்போது சொந்த ஊரில் வசித்து வருகிறார். இவர் தனது மொபைல் போனில் சிறார் சம்பந்தம்மான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்துள்ளார். மேலும் அவற்றை போலியான முகநூல் கணக்கு ஒன்றை உருவாக்கி பகிரவும் செய்துள்ளார்.

குமாரபாளையம் பகுதியில் சிறார் ஆபாச படங்களை பரப்புவதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தியதில் குருசாமி அந்த செயலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை மூலமாக குருசாமி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சமீப காலமாக ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது மேலும் ஒருவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

10ம் வகுப்பு மாணவியை சீரழித்து சித்தரவதை செய்த 17 வயது சிறுவன்! 6 நாட்கள் அடைத்து வைத்து அனுபவித்த கொடூரம்..!

Source: AsianetTamil

Author Image
Kundralan M