பைக்கில் வந்தவரிடம்  சீட பெல்ட்,சீருடை எங்கே என்று எகிறிய காவல் துறை..!!ரூ1200 அபராதம்.! இது காக்கியின் தர்பார்.!!

பைக்கில் வந்தவரிடம் சீட பெல்ட்,சீருடை எங்கே என்று எகிறிய காவல் துறை..!!ரூ1200 அபராதம்.! இது காக்கியின் தர்பார்.!!

By; T.Balamurukan

பைக்கில் வந்தவர் சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறி ரூ.1,200 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தை நினைத்து காக்கிசட்டை அதிகாரிகள் கலங்கிப்போய் இருக்கிறார்களோ இல்லையோ! பொதுமக்கள் காக்கிகளை காறிதுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.  

ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ‘பன்னீர் செல்வம் பூங்கா’ அருகே வாகன சோதனை மேற்கொண்டார்.. அப்போது ஈரோடு சடையம்பாளையம் குறிஞ்சி நகரை சோ்ந்த சரவணக்குமார் என்பவர் ஓட்டி வந்த பைக்-கை அதிக சத்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்தியதாகவும், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்தது, முறையான சீருடை இல்லாமல் வாகனத்தை ஓட்டியது உள்ளிட்ட விதிமுறைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இ-சலான் மெசின் மூலம் ரூ.1,200 அபராதம் விதித்தார். அவர் ஓட்டி வந்த பைக் திருச்சி ராஜிவ்காந்திநகரைச் சேர்ந்த சுப்பையா என்பவருக்கு சொந்தமானது என்று விசாரனையில் தெரியவந்தது.  இந்த அபராத தொகையை வாகன ஓட்டி சரவணக்குமார் செலுத்த மறுத்து சென்று விட்டதாக சொல்லப்படிகிறது.


 இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள்,  சம்பந்தப்பட்ட எஸ்.ஐ பதிவு செய்த வழக்குகளை  ஆய்வு செய்தனர்.  அப்போது மோட்டார் சைக்கிளுக்கு சீட் பெல்ட், சீருடை, ஒலி மாசு வழக்கு பதிவிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விசாரணை நடத்தினர். சப்-இன்ஸ்பெக்டரை காப்பாற்றுவதற்காக,சரவணக்குமார் ஓட்டி வந்தது தனியார் ஆம்புலன்ஸ் என்றும், அந்த வாகன பதிவு எண்ணை பதிவிடுவதற்கு பதிலாக தவறுதலாக வேறு எண்ணை சப்-இன்ஸ்பெக்டர் பதிந்துவிட்டார் என்றும் கட்டுகதைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறது போலீஸ்.  திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா என்பவரது மோட்டார் சைக்கிளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.  

 இசலான் மெசின், ஆன்லைன் மூலம் வழக்கு பதிவு செய்யப்படுவதால் இந்த அபராத தொகையை யார்? செலுத்த போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பைக்கு சீட் பெல்ட், சீருடை அணியாமல் சென்றதாக அபராதம் விதித்துள்ள இசலான் ரசீது சமூக வலைதளங்களில் மின்னல் வேகமெடுத்திருக்கிறது.

Source: AsianetTamil

Author Image
Kundralan M