அந்த வீரரை அணியில் சேர்க்காததால் இழப்பு அணிக்குத்தான்; அவருக்கு இல்ல.. முன்னாள் வீரர் தடாலடி

அந்த வீரரை அணியில் சேர்க்காததால் இழப்பு அணிக்குத்தான்; அவருக்கு இல்ல.. முன்னாள் வீரர் தடாலடி

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது.

அடுத்ததாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. காயம் காரணமாக ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியதால், டெஸ்ட் போட்டிகளில் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்கப்போவது கில்லா பிரித்வி ஷாவா என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இருவருமே சிறந்த வீரர்கள்; அதுமட்டுமல்லாமல் இரண்டு பேருமே நல்ல ஃபார்மில் இருப்பதால், டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்கப்போவது யார் என்ற கேள்வியுள்ளது. 

இந்நிலையில், செம ஃபார்மில் அசத்தலாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருக்கும் கேஎல் ராகுலை டெஸ்ட் அணியில் சேர்க்காதது, அணிக்கு மிகப்பெரிய இழப்பு என முன்னாள் வீரர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ஜாகீர் கான், ராகுல் சிறந்த வீரர். அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிந்தவர். அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆட மிகவும் விரும்புகிறார் என்று எனக்கு தெரியும். தற்போது அவர் அருமையான ஃபார்மில் அபாரமாக ஆடி ரன்களை குவித்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்கையில், அவரை டெஸ்ட் அணியில் எடுக்காதது அணிக்குத்தான் மிகப்பெரிய இழப்பே தவிர, அவருக்கு இல்லை என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். 

Also Read – வித்தியாசமான 2 ஃபீல்டிங் செட்டப்.. டி காக்கின் கேப்டன்சியில் தோனியின் சாயல்

கேஎல் ராகுல், கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சரியாக ஆடவில்லை. அதன் விளைவாக, டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ராகுல், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. ஆனால் தற்போது அல்டிமேட் ஃபார்மில் இருந்தும் கூட, அவர் டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டது ஜாகீர் கானுக்கு மட்டுமல்ல.. பலருக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. 
 

Source: AsianetTamil

Author Image
Kundralan M