தளபதி விஜய்க்காக சாமியாரிடம் தஞ்சம் புகுந்த எஸ்.ஏ.சி?: என் மகனை காப்பாத்துங்க குரு! என்று கண்ணீர்!

தளபதி விஜய்க்காக சாமியாரிடம் தஞ்சம் புகுந்த எஸ்.ஏ.சி?: என் மகனை காப்பாத்துங்க குரு! என்று கண்ணீர்!

ரெய்டு பஞ்சாயத்து ரணகளங்களில் இருந்து விஜய்யே மீண்டு, அவரது ரெகுலர் வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார். ஆனால், மீடியாக்களும், பத்திரிக்கைகளும் அவரையும் ரெய்டையும் இன்னமும் கொஞ்சங்கூட மறக்கவில்லை. புதுசு புதுசாய் பல விஷயங்களை நோண்டியெடுத்து எழுதி, நுங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் புதிதாக ஒரு பரபரப்பு இப்போது கிளம்பியிருக்கிறது. அது, விஜய்யை இந்த பிரச்னை பஞ்சாயத்துகளில் இருந்து காப்பாற்றிட வேண்டி, சாமியார் ஒருவரிடம் விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகரன் தஞ்சமடைந்திருக்கிறார்! என்பதுதான். விளக்கமாக கூறும் அரசியல் பார்வையாளர்கள்…..

”விஜய்யோட இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் செல்வாக்கு மற்றும் இளைஞர் வாக்கு வங்கியின் ஆதரவுதான். இதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் அரசியலுக்கு வந்து இம்சை கொடுப்பாரோ? என்பதுதான் டெல்லி மற்றும் சென்னை கோட்டைகளில் ஆள்பவர்களின் கடுப்பே. அதனால்தான் அவரை அடக்கி வைப்பதற்காக ரெய்டு ஆயுதத்தை கையில் எடுத்தனர். விஜய் அரசியலுக்கு வருவாரோ? என அவர்கள் சந்தேகப்படுவதற்கு காரணமே அவரது அப்பா எஸ்.ஏ.சி.யின் செயல்பாடுகளும், பேச்சும்தான். ‘என் மகனுக்கு இளைஞர் செல்வாக்கு அதிகமிருக்குது. மக்கள் அவரை விரும்புறாங்க!’ அப்படின்னெல்லாம் அடிக்கடி பேசி வைப்பது சந்திரசேகரனின் வழக்கம்.  அதனால் ஒரு விஷயத்தை நேரடியாக சொல்வதானால், விஜய்யின் இந்த பிரச்னைக்கு அவரோட அப்பாவும் மிக முக்கிய காரணமே. இதனால்தான் கடந்த சில வருஷமாகவே தன் அப்பாவின் கண்ட்ரோலில் இருந்து ரொம்பவே விலகி இருந்தார் விஜய். காரணம், இப்படியான லூஸ் டாக் அவருக்கு பிடிக்கவில்லை. அரசியல் ஆசை விஜய்க்கு இருக்குது, ஆனால் இன்னும் சில வருடங்கள் நல்லா செல்வாக்கை ஸ்டிராங்க் ஆக்கிட்டு அப்புறமா வர ஆசைப்படுறார். அது வரைக்கும் அண்டர் பிளே பண்ணத்தான் ஆசைப்படுறார் அவர். இந்த நிலையில்தான் விஜய் மீது இந்த ரெய்டு பாய்ச்சல் நடத்தி, அவரை கார்னர் பண்ணியிருக்குது  அதிகார மட்டம். 

மகன் மீதான பாய்ச்சலால் எஸ்.ஏ.சந்திரசேகரன் ரொம்பவே கலங்கிட்டார். எப்பவுமே கோபப்பட்டு தாட்பூட் தடால்புடால்னு பேசிடுறவர், இந்த முறை ரொம்பவே அடக்கி வாசிக்கிறார். பா.ஜ.க.வோடு மோதுற மாதிரி எதையும் பேசிட கூடாது!, அமைதியா இருங்க, நான் கவனிச்சுக்கிறேன்!ன்னு விஜய் வேறு அவருக்கு உத்தரவு போட்டிருக்கிறார். ஆனால் எஸ்.ஏ.சி.யால் அப்படி அமைதியா இருக்க முடியலை. டெல்லி தரப்பை கூல் பண்ணும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதுக்காக பா.ஜ.க. தலைமையோடு ரொம்பவே நெருக்கமா இருக்கிற ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ்வின் உதவியை கேட்டிருக்கிறார் எஸ்.ஏ.சி. விஜய்யின் அப்பாவும், அம்மாவும் ஈஷா யோகா மையத்தின் பெரிய விசிறிகள். மஹாசிவராத்திரி சமயங்களில் அங்கே போயி பஜனையில் கலந்து கொண்டு, பாட்டுப் பாடுற அளவுக்கு அவங்க அம்மா ரொம்பவே ஈடுபாடானவர். 

அந்த நெருக்கத்தின் அடிப்படையில்தான் ஜக்கி வாசுதேவை அவரது மிக முக்கிய சீடர்கள் மூலமா தொடர்பு கொண்டு, ‘விஜய்யால் டெல்லி வி.வி.ஐ.பி.க்களுக்கும், தமிழக பா.ஜ.க.வுக்கும் எந்த பிரச்னையும் வரவே வராது. ப்ளீஸ் விஜய் மேலே எந்த கோபமும் வேண்டாமுன்னு சொல்லுங்க. என் மகன் அவர் பாட்டுக்கு தன் சினிமா வேலைகளை மட்டும் பார்த்துட்டு போயிடுவார். மத்தியரசை உரசுற மாதிரி காட்சிகள், டயலாக்கெல்லாம் இருக்காது. இதை மேலிடத்துல சொல்லுங்க சாமி (ஜக்கி வாசுதேவைதான்), என் பையனை காப்பாத்துங்க சாமி!’ என்று வேண்டியிருக்கிறார் அப்படின்னு நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வருது.” என்கிறார்கள். 
நம்பலாமா? பிகிலை காப்பாற்றுவாரா ஆதியோகி?

Source: AsianetTamil

Author Image
Kundralan M