சாமி எம் புருசன் முதலமைச்சர் ஆகனும்.!! கோயிலுக்கு படையெடுக்கும்  ஸ்டாலின் மனைவி..!!

சாமி எம் புருசன் முதலமைச்சர் ஆகனும்.!! கோயிலுக்கு படையெடுக்கும் ஸ்டாலின் மனைவி..!!

By: T.Balamurukan

தமிழ்நாடு சட்டமான்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா கோவிலுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்.மனதில் எது நினைத்தாலும் நிறைவேற்றி தரக்கூடிய சக்தி வாய்ந்தவர் திருகொளஞ்சியப்பர். இந்த அப்பரிடம் வந்து தனது கோரிக்கைகளை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கட்டியிருக்கிறார் துர்கா. வரக்கூடிய சட்டமன்றத்தேர்தல் தன் புருசன் இந்த நாட்டுக்கே முதல்வராகனும்னு கொளஞ்சியப்பர்கிட்ட வேண்டியிருக்காங்க 

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் திருகொளஞ்சியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து சாமி தரிசனம் செய்தார் துர்கா.ஒரு துண்டு சீட்டில் தன்னுடைய கோரிக்கைகளை எழுதி அங்குள்ள மரத்தில் கட்டிவிட்டு தான் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்று சிறப்பு பூஜையும் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிரார். நினைத்தது நிறைவேறும் தலம்  என்பது அங்குள்ள மக்களின் ஐதீகம்.
மனைவியின் வேண்டுதல் பலிக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்கனும்.

 

Source: AsianetTamil

Author Image
Kundralan M