ராமாயண எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி அடுத்த மாதம் தொடக்கம்

ராமாயண எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி அடுத்த மாதம் தொடக்கம்

ராம பிரானுடன் தொடர்புடைய இடங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரெயிலின் தொடக்க விழாவை அடுத்த மாத இறுதிக்குள் நடத்த ரெயில்வே முடிவு செய்துள்ளதாக ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்தார்.

புதுடெல்லி:

ராமபிரானுடன் தொடர்புடைய தலங்களுக்கு புனித யாத்திரை செல்லும் வகையில் ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றை மத்திய ரெயில்வே அமைச்சகம் ஏற்கனவே இயக்கியது.

இதன் தொடர்ச்சியாக ராமாயண கருப்பொருட்கள் அடங்கிய உட்புறம், பின்னணி பஜனை இசை உள்ளிட்ட வசதிகளுடன் புதிய ரெயில் ஒன்றை ரெயில்வே உருவாக்கி உள்ளது. இந்த ரெயிலின் தொடக்க விழாவை அடுத்த மாத இறுதிக்குள் நடத்த ரெயில்வே முடிவு செய்துள்ளதாக ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்தார்.

இந்த ரெயிலும் ராம பிரானுடன் தொடர்புடைய இடங்களுக்கு சென்று வரும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ரெயிலின் பயண அட்டவணை விரைவில் இறுதி செய்யப்படும் எனவும், ஹோலி பண்டிகைக்குப்பின் இந்த ரெயில் சேவை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan