மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்…. கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த கொடுமை

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்…. கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த கொடுமை

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீரட்:

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள கல்லூரியில் எம்பிஏ படிக்கும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கல்லூரியில் இருந்து வீடு திரும்பியபோது, 4 பேர் கொண்ட கும்பல் அந்த மாணவியை கடத்திச் சென்றுள்ளது. பின்னர் மாணவியை 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

அவர்களுடன் மாணவி கடுமையாக போராடியுள்ளார். இதனால் இரும்பு கம்பியால் மாணவியை தாக்கி, பின்னர் துடிக்க துடிக்க பலாத்காரம் செய்துள்ளனர். மாணவி மயக்கமடைந்ததும், 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். புலந்த்சாகர் மாவட்டம் சியானா கோட்வாலி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

பலத்த காயமடைந்த மாணவி மீரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் தேடி வருகினற்னர். 

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நடந்த கொடுமை போன்று, இந்த கொடுமையும் நடந்துள்ளது. லிப்ட் கொடுப்பதாக கூறி மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan