தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.31,392-க்கு விற்பனை ஆகிறது.

சென்னை:

தங்கம் விலை கடந்த மாதம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சவரனுக்கு ரூ.31 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு விலை இறங்குவதும், ஏறுவதுமாக உள்ளது. சென்னையில் நேற்று மாலை ஒரு கிராம் ரூ.3889, ஒரு சவரன் ரூ.31,112-க்கும் விற்பனையானது.

இன்று கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.3924-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.31392-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.50-க்கும், ஒரு கிலோ ரூ.50 ஆயிரத்திற்கும் விற்பனை ஆகிறது.

Source: Maalaimalar

Author Image
murugan