கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு- சீனாவில் மேலும் 143 பேர் பலி

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு- சீனாவில் மேலும் 143 பேர் பலி

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மேலும் 143 பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1631 ஆக உயர்ந்துள்ளது.

பீஜிங்:

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹூபே மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பீஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், வுகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி நேற்று மேலும் 143 நபர்கள் பலியாகியுள்ளனர். ஹூபே மாகாணத்தில் மட்டும் 139 பேர்  உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1631 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று மேலும் 2641 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனா முழுவதும் மொத்தம் 67,535 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan