இந்தியர் வடிவமைத்த ஆடையில் இவாங்கா

இந்தியர் வடிவமைத்த ஆடையில் இவாங்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா நேற்று பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அனிதா டாங்கரே வடிவமைத்த ஆடையை அணிந்திருந்தார்.

புதுடெல்லி:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா, நேற்று முன்தினம் சில இந்திய பாணி உடைகளையும், வெனிசுலா நாட்டு ஆடை வடிவமைப்பாளர் கரோலினா ஹெரேரா வடிவமைத்த ஆடைகளையும் அணிந்திருந்தார்.

அவரது பாணியை பின்பற்றி, அவருடைய மகள் இவாங்கா நேற்று பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அனிதா டாங்கரே வடிவமைத்த ஆடையை அணிந்திருந்தார். மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் இருந்து கையால் நெய்யப்பட்ட பட்டால் உருவாக்கப்பட்ட வெள்ளை நிற ஷெர்வானி உடையை அணிந்து, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அனிதா டாங்கரே இதற்கு முன்பு இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன், பெல்ஜியம் ராணி மடில்டே, கனடா பிரதமரின் மனைவி சோபி ட்ருடோ, அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி ஆகியோருக்கும் ஆடை வடிவமைத்து கொடுத்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan