டெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு

டெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு

டெல்லியில் தொடரும் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அமைதி பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உ.பி. கிழக்குப் பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.

புதுடெல்லி:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களில் கடைகள், கார்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, டெல்லி வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நிலவும் வன்முறைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி பேரணி இன்று மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உ.பி. கிழக்குப் பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். தொண்டர்களுடன் அவர் பேரணியில் நடந்து சென்றார். ஜந்தர் மந்தர் பகுதியில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan