ரெயில் நிலையங்களில் நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல் துறையினர்

ரெயில் நிலையங்களில் நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல் துறையினர்

சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் நடனமாடியபடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை:

கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே வெளியே அனுப்பப்படுகின்றனர். ரெயில் நிலையங்களில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு தரப்பினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரெயில்வே போலீசார் நேற்று ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் குறித்த பாடலுக்கு நடனமாடும் ரெயில்வே போலீசார், மக்கள் வைரசில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்தும், கைகளை கழுவும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பயணிகள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பது குறித்தும் அவர்கள் விளக்கினர். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த துண்டு பிரசுரங்களையும் ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணி களிடம் வழங்கினர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan