தமிழகத்தில் நாளை பார வண்டிகள் ஓடாது- மாநில சம்மேளனம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை பார வண்டிகள் ஓடாது- மாநில சம்மேளனம் அறிவிப்பு

நாளை லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் ஓடும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் நாளை ஓடாது என்பது உறுதியாகி உள்ளது.

நாமக்கல்:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. நாளை (22-ந் தேதி) இந்தியா முழுவதும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

இதை ஏற்று தமிழகத்தில் நாளை ஒரு நாள் மட்டும் லாரிகள் இயக்கப்பட மாட்டாது. மாநிலம் முழுவதும் உள்ள 4 லட்சம் லாரிகளும் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநிலங்களில் பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு லோடு கிடைக்கவில்லை. பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி, நாளை (22-ந் தேதி) முழுவதும் லாரிகள் இயங்காது. அனைத்து லாரி உரிமையாளர்களும் இந்த உத்தரவை பின்பற்றி தங்களது வாகனங்களை இயக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் ஓடும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் நாளை ஓடாது என்பது உறுதியாகி உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan