சுய ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தாருங்கள் – ரஜினிகாந்த் வேண்டுகோள்

சுய ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தாருங்கள் – ரஜினிகாந்த் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி கூறியபடி வீட்டிலேயே இருங்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி கூறியபடி வீட்டிலேயே இருங்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது, அது மூன்றாம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது.

இத்தாலியில் 2-வது நிலையில் இருந்தபோது மக்கல் உதாசீனப்படுத்த்யதால் தான் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி கூறியபடி நாளை வீட்டிலேயே இருக்க வேண்டும். சுய ஊரடங்கின் போது மக்கள்  ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.

மக்கள் நடமாட்ட பகுதிகளில் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களை பாராட்டுவோம். சுயநலமின்றி பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan