தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆக உயர்வு

துபாயில் இருந்து சென்னை வந்த நெல்லையை சேர்ந்தவர் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. 

உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 370 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலிஃபோர்னியா, துபாயில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கலிஃபோர்னியாவில் இருந்து வந்தவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

துபாயில் இருந்து வந்தவர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்த நிலையில் தற்போது 9 ஆக உள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan