கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண் குணமடைந்தார்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண் குணமடைந்தார்

உத்தரபிரதேசத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கனடாவைச் சேர்ந்த 35 வயதான இந்திய வம்சாவளி பெண் குணமடைந்து வீடு திரும்பினார்.

லக்னோ:

கனடாவைச் சேர்ந்த 35 வயதான இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கடந்த 8-ந்தேதி தனது உறவினர்களை பார்ப்பதற்காக உத்தரபிரதேசம் வந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்படவே லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது 11-ந்தேதி உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் மருத்துவக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் கொரோனா நோயாளி இவர் ஆவார். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற அந்த பெண் குணமடைந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று அவர் வீடு திரும்பினார். எனினும் அவர் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளார். உத்தரபிரதேசத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 26 நோயாளிகளில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan