மேற்கு வங்காளம்: அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறிய 255 பேர் கைது

மேற்கு வங்காளம்: அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறிய 255 பேர் கைது

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறிய 255 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தா:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 468 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனது. இந்த வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநில எல்லைகளை மூடியும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, மேற்கு வங்காள மாநிலத்திலும் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் நேற்று இரவு முதல் சீல் வைக்கப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் கூட்டமாக கூடாது, அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளக்கூடாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொல்கத்தாவில் அரசு விதித்த தடைகளை மீறி பயணம் செய்தல், பொது இடங்களில் கூட்டமாக கூடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 255 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan