தேசிய மக்கள் தொகை , என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைப்பு?

தேசிய மக்கள் தொகை , என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைப்பு?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை, என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 196 நாடுகளில் பரவியுள்ளது. 

உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலக அளவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்தியாவிலும் 500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெறவிருந்த 2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முதல் கட்ட மக்கள் தொகை, என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால்  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Tags :

 மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய செய்திகள் இதுவரை…

Source: Maalaimalar

Author Image
murugan