இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

அலகாபாத்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 606 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று வரை 10 பேர் உயிரிழந்திருந்தனர்.

இதற்கிடையில், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 85 வயது நிரம்பிய பெண் கொரோனா அறிகுறிகளுடன் கடந்த 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அப்பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan