கொரோனா: ரஷிய அதிபர் புதின் – பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

கொரோனா: ரஷிய அதிபர் புதின் – பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

கொரோனா உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில் வைரஸ் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ரஷிய அதிபர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினர்.

புதுடெல்லி:

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவிலும் இதுவரை 606 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு நாடு முழுவதும் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் ரஷியாவிலும் கொரோனா வைரசுக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 658 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ரஷியன் அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலின் போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும், ரஷியாவில் உள்ள இந்திய மாணவர்களின் நலனை பாதுக்காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகொள் விடுத்தார். அதற்கு இந்திய மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உறுதி அளித்தார்.

அதேபோல் இந்தியாவில் உள்ள ரஷிய நாட்டினரின் நலன் காக்கவும், தேவைப்பட்டால் சொந்த நாட்டிற்கு அனுப்பவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என புதினுக்கு பிரதமர் மோடி உறுதி அளித்தார். 

இந்த உரையாடலின் போது கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளின் ஒத்துழைப்பின் அவசியம், ஜி-20 கூட்டமைப்பின் பங்கு, கொரோனாவால் உலக பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan