ஒரே நாள் – இத்தாலியில் 712 பேர், ஸ்பெயினில் 498 பேர், பிரான்சில் 365 பேர் – புரட்டி எடுக்கும் கொரோனா

ஒரே நாள் – இத்தாலியில் 712 பேர், ஸ்பெயினில் 498 பேர், பிரான்சில் 365 பேர் – புரட்டி எடுக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 721 பேர், ஸ்பெயினில் 498 பேர், பிரான்சில் 365 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரோம்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 7 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 670 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 3 லட்சத்து 77 ஆயிரத்து 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 322 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா புரட்டி எடுத்துவருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு 712 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரசுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெயினிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 498 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 365 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.   

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan