Press "Enter" to skip to content

இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஆயிரம் பேர் மீட்பு – அப்டேட்ஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 18 பேர் குணமடைந்துள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரசால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தாலும் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் குணமடைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் இன்றைய நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 37 ஆயிரத்து 776 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கபட்டவர்களில் ஆயிரத்து 223 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், இந்த கொடிய வைரசில் இருந்து நாடு முழுவதும் ஆயிரத்து 18 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுள்ளனர்.  

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »