ஊரடங்கு நீடிக்குமா?- இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஊரடங்கு நீடிக்குமா?- இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.

புதுடெல்லி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால் 45 நாட்களுக்கு மேலாகியும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கையொட்டி விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரவல் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் 5-வது தடவையாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு 4-வது முறையாக நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி மறைமுகமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.

அப்போது அவர் பல அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan