தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உயிரிழப்பு – ஒரே நாளில் 8 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உயிரிழப்பு – ஒரே நாளில் 8 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் பலியாகியுள்ளனர். மாவட்ட வாரியாக மொத்த விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 716 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவால் பரவியவர்களில் 6 ஆயிரத்து 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது. 

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக விவரம்:- 

செங்கல்பட்டு – 4

சென்னை – 39

கோவை – 1

கடலூர் – 1

திண்டுக்கல் – 1

ஈரோடு – 1

காஞ்சிபுரம் – 1

கன்னியாகுமரி – 1

மதுரை – 2

ராமநாதபுரம் – 1

தேனி – 1

திருவள்ளூர் – 3

தூத்துக்குடி – 1

திருநெல்வேலி – 1

விழுப்புரம் – 2

மொத்தம் – 61

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan