ரூ. 20 லட்சம் கோடியில் பொருளாதார வளர்ச்சி சிறப்புத்திட்டங்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு

ரூ. 20 லட்சம் கோடியில் பொருளாதார வளர்ச்சி சிறப்புத்திட்டங்கள் – பிரதமர் மோடி அறிவிப்பு

பொருளாதாரத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:  

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. 

இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கு மே 17-ம் தேதி நிறைவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். 

அந்த உரையில் அவர் கூறியதாவது:-

வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே தருணம். நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள். இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும். 

நாட்டின் மொத்த உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan