4 ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – பிரதமர் மோடி

4 ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – பிரதமர் மோடி

நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. 

இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கு மே 17-ம் தேதி நிறைவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். 

அந்த உரையில் அவர் கூறியதாவது:-

4 ஆம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அந்த ஊரடங்கு தொடர்பான விவரங்கள் மே 18-ம் தேதிக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும்.

மாநிலங்களின் பரிந்துரையின் அடிப்படையில் 4-ம் கட்ட ஊரடங்கு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan