ஒரே நாளில் 10,899 பேருக்கு கொரோனா பாதிப்பு – மூன்றாம் இடத்தில் ரஷ்யா

ஒரே நாளில் 10,899 பேருக்கு கொரோனா பாதிப்பு – மூன்றாம் இடத்தில் ரஷ்யா

ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ரஷ்யா தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது.

மாஸ்கோ:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ரஷ்யாவில் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார்.

தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 3-வது இடத்தை பிடித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,899 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,32,243 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் நேற்று 107 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு மொத்த உயிரிழப்புகள் 2,116 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற நாடுகளை காட்டிலும் ரஷ்யாவில் கொரோனா உயிரிழப்பு குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan