10-ம் வகுப்பு தேர்வுக்கு தடை கேட்டவழக்கு- உயர்நீதிநீதி மன்றத்தில் நாளை விசாரணை

10-ம் வகுப்பு தேர்வுக்கு தடை கேட்டவழக்கு- உயர்நீதிநீதி மன்றத்தில் நாளை விசாரணை

ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள 10-ம் வகுப்பு தேர்வுக்கு தடை கேட்டவழக்கு நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணை வர உள்ளது.

சென்னை:

பத்தாம் வகுப்பு தேர்வை வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னைசூளைமேட்டை சேர்ந்த ஸ்டாலின் ராஜா என்பவர், தொடர்ந்துள்ள வழக்கில்,‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேஇருக்கிறது.

இதுவரை 61 பேர் இந்த வைரஸ் தாக்கி இறந்துள்ளனர். 8 ஆயிரத்து 718 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், வைரஸ் தொற்றை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். ஏற்கனவே, தமிழகத்தில் 200 குழந்தைகள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொது தேர்வை நடத்தினால், கொரோனா வைரஸ் தொற்று மாணவர்களிடையே பரவி, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை வருகிற ஜூன் 1- ந்தேதி நடத்த தடை விதிக்க வேண்டும். அமைச்சரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan