கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

உலகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்று பார்ப்போம்…

புதுடெல்லி:

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஸ்பெயின், ரஷியா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் வகிக்கின்றன. அமெரிக்காவின் அண்டை நாடான கனடா 12-வது இடத்தில் இருந்தது.

அந்த நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 71,157-ஆக இருந்தது. இந்நிலையில் கனடாவை விட குறைவான எண்ணிக்கையை கொண்டிருந்த இந்தியா, அந்த எண்ணிக்கையை நேற்று தாண்டியது.

இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 74,281 ஆக உள்ளது. இதனால் 11-வது இடத்தில் இருக்கும் சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா உள்ளது. சீனாவில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan