ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள்- அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள்- அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

புதுடெல்லி:

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

பொருளாதாரம், கட்டமைப்பு, தொழிற்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள். சுயசார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியா தன்னிறைவு அடைந்து உலகிற்கும் உதவும். 

தொழில்களை நடத்தவது எளிதாக்கப்படும். இந்திய வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இத்திட்டம் பயன்படும். 5 அம்ச நோக்கங்களுடன் ரூ 20 லட்சம் கோடியிலான தன்னிறைவு இந்தியா திட்டம் உருவாக்கம்.

பொருளாதாரம், உட்கட்டமைப்பு, மனிதவளம், உற்பத்தி தொழில்நுட்பத்தை மையமாக்கி திட்டங்கள் தயாரிப்பு. உள்ளூர் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை பிரதமர் அடிப்படையாகத் தெரிவித்துள்ளார். நேரடி மானிய திட்டம் மக்களுக்கு மிகவும் உதவிகரமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan