‘தன்னிறைவு இந்தியா’ திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

‘தன்னிறைவு இந்தியா’ திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். 

அவர் கூறுகையில்:-

இந்தியாவின் வளர்ச்சி பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மனித வளம், தேவை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 5 காரணிகளை கொண்டதாகும்.

பிரதமர் மோடி அறிவித்துள்ள 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan