‘மக்கள் எதிர்பார்த்ததோ நிவாரணம், கிடைத்ததோ மிகப்பெரிய பூஜ்ஜியம்’ – மம்தா அதிரடி

‘மக்கள் எதிர்பார்த்ததோ நிவாரணம், கிடைத்ததோ மிகப்பெரிய பூஜ்ஜியம்’ – மம்தா அதிரடி

நிதிமந்திரியின் அறிவிப்பில் மக்களுக்கு மிகப்பெரிய பூஜ்ஜியம் தான் கிடைத்துள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா:

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார சிறப்பு திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். 

அதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல லட்ச கோடி ரூபாய் மதிப்பில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், பொது மக்கள் நலன் சார்ந்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பொருளாதார சிறப்பு நடவடிக்கைகளின் அறிவிப்புகள் தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு மிகப்பெரிய பூஜ்ஜியம் தான் கிடைத்துள்ளது’ என்றார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan