பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது

இஸ்லாமாபாத்:

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. 

கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு 35, 298-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 761 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8 ஆயிரத்து 899 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Source: Maalaimalar

Author Image
murugan