100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் உயர்வு – நிர்மலா சீதாரமன்

100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் உயர்வு – நிர்மலா சீதாரமன்

100 நாள் வேலைத்திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பொருளாதார சிறப்பு திட்டங்களின் இரண்டாம் அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டு வருகிறார்.

இன்று மொத்தம் 9 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது.

இந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் எனப்படும் 100 நாள்வேலைத்திட்டத்தில் கடந்த நிதியாண்டின் அடிப்படையில் ஒரு நாளுக்கான ஊதியம் ரூ.182 ஆக இருந்து வருகிறது.

அந்த ஊதியம் இனி ரூ.202 ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வால் சொந்த ஊர்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் பயன் அடைவார்கள்.

கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும் போது இந்த ஆண்டு கூடுதலாக 40 முதல் 50 சதவீகதம் பேர் புதிதாக 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

கொரோனா காலத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்காக ரூ.10,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan