ரூ. 20 லட்சம் கோடி திட்டங்கள் – ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு

ரூ. 20 லட்சம் கோடி திட்டங்கள் – ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு

பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்கள் குறித்து ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை

பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்கள் குறித்து ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நியூயார்க்:

பிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். இதற்கு ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, உலகளாவிய பொருளாதார கண்காணிப்பு பிரிவு தலைவர் ஹமிது ரஷித் கூறுகையில், இந்தியாவின் அறிவிப்பு மிகவும் வரவேற்புக்குரிய நிகழ்வு. வளரும் நாடுகளின் பொருளாதார திட்டங்களில், இதுதான் மிகப்பெரியது. இதை அமல்படுத்தும் திறனும் இந்தியாவுக்கு உள்ளது. இத்திட்டத்தின் வடிவமைப்பை பொறுத்து இதன் தாக்கம் அமையும் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan