கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 359 பேர் மீட்பு – முழு விவரம்

கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 359 பேர் மீட்பு – முழு விவரம்

சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 434 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உள்மாநிலத்தில் 385 பேரும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 49 பேரும் உள்ளடக்கம் ஆகும். 

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது. 

இதில், விமான நிலைய தனிமைப்படுத்தல், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 435 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொரோனாவுக்கு இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இன்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 359 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் – 195

செங்கல்பட்டு – 68

சென்னை – 783

கோவை – 144

கடலூர் – 37

தர்மபுரி – 1

திண்டுக்கல் – 83

ஈரோடு – 69

கள்ளக்குறிச்சி – 14 

காஞ்சிபுரம் – 71

கன்னியாகுமரி – 16

கரூர் – 44

மதுரை – 87

நாகை – 44

நாமக்கல் – 77

நீலகிரி – 11

பெரம்பலூர் – 30

புதுக்கோட்டை – 2

ராமநாதபுரம் – 21

ராணிப்பேட்டை – 42

சேலம் – 35

சிவகங்கை – 12

தென்காசி – 34

தஞ்சாவூர் – 53

தேனி – 42

திருப்பத்தூர் – 18

திருவள்ளூர் – 84

திருவண்ணாமலை – 14

திருவாரூர் – 29

தூத்துக்குடி – 26

திருநெல்வேலி – 63

திருப்பூர் – 114

திருச்சி – 56

வேலூர் – 20

விழுப்புரம் – 128

விருதுநகர் – 32

  

மொத்தம் – 2,599 

Source: Maalaimalar

Author Image
murugan