பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் தயாரிப்பில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன்

பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் தயாரிப்பில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன்

பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் தயாரிப்பில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீகிதமாக அதிகரிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

நான்காம் கட்டமான இன்றைய அறிவிப்பில் நிலக்கரி, கனிமங்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, விமானத்துறை, விண்வெளி, அணுசக்தி உள்பட 8 துறைகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

அறிவிப்பில் நிதி மந்திரி கூறியதாவது:

*ராணுவ தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பயன்படுத்தப்படும்.

*பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்களை தயாரிக்க அந்நிய நேரடி முதலீடு 49 சதவீகிதத்தில் இருந்து 74 சதவீகிதம் வரை அதிகரிப்பு.

*ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் நிறுவனங்களாக மாற்றப்படும்.

*பாதுகாப்பு உபகரணங்களின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் கொள்முதல் செய்ய புதிய விதிமுறை அமல்படுத்தப்படும்.

*ராணுவ தளவாடங்கள் இறக்குமதி மசோதா விரைவில் அறிமுகம்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan