இந்திய விண்வெளித்துறையிலும் தனியாருக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்

இந்திய விண்வெளித்துறையிலும் தனியாருக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்

இந்திய விண்வெளித்துறையான இஸ்ரோவில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தன்னிறைவு இந்தியா திட்டத்தின் நான்காம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதி மந்திரி அரசின் பல துறைகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார். 

நான்காம் கட்ட இன்றைய அறிவிப்பில் அவர் கூறியதாவது:-

*இந்திய விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்.

*இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

*செயற்கைக்கோள் தயாரிப்பு, செயற்கைக்கோள் ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க திட்டம்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan