நேபாளத்தில் கொரோனா தொற்றுக்கு முதல் பலி

நேபாளத்தில் கொரோனா தொற்றுக்கு முதல் பலி

நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 29 வயது பெண்மணி உயிரிழந்தார். இது அந்நாட்டில் கொரோனாவுக்கு முதல் பலியாகும்.

காத்மாண்டு:

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் இந்த வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்தியாவின் அண்டை நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 29 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் அந்நாட்டில் கொரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 280-ஐ கடந்துள்ளதுஎன அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan