கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா

கேரளாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரளாவின் திருச்சூரில் 4, கோழிக்கோடு 3, பாலக்காடு மற்றும் மலப்புரத்தில் தலா 2 பேர் என மொத்தம்11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 587 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கேரளாவில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan