புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுங்கள் – உ.பி முதல் மந்திரிக்கு பிரியங்கா காந்தி கடிதம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுங்கள் – உ.பி முதல் மந்திரிக்கு பிரியங்கா காந்தி கடிதம்

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உத்தர பிரதேச அரசு உதவ வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

ராஜஸ்தானில் தங்கி வேலை பார்த்த வெளிமாநில தொழிலாளர்கள் லாரி மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற லாரி, நேற்று அதிகாலையில் உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் சென்றபோது மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

விபத்து குறித்து கேள்விப்பட்ட உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன், விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உத்தர பிரதேச அரசு உதவ வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும். நாட்டைக் கட்டமைக்கும் தொழிலாளர்கள் இப்படி சாலைகளில் நடப்பதை கண்டு மனவேதனை அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan