மதுக்கடைகளில் கண்ட ருசிகர காட்சிகள்

மதுக்கடைகளில் கண்ட ருசிகர காட்சிகள்

மதுக்கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதினாலும், சில ருசிகர காட்சிகள் அரங்கேறியதையும் பார்க்க முடிந்தது.

* மதுபாட்டில் வாங்குவதற்காக ஏராளமானோர் சாக்கு பை, துண்டு, துணி பை முதலியவற்றை எடுத்து வந்ததை பார்க்க முடிந்தது. இன்னும் சிலர் தாங்கள் உடுத்தியிருந்த கைலிகள் மற்றும் ஹெல்மெட்டில் அடுக்கி வைத்து மது பாட்டில்களை கொண்டு சென்றனர்.

* ஊத்துக்காடு அருகே உள்ள மதுக்கடை ஒன்றில் மதுபிரியர்கள் குடை பிடித்தபடி சமூக இடைவெளியை கடைப்பிடித்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

* மதுக்கடைகளில் டோக்கன் வாங்குவதற்காக தள்ளாடும் வயதிலும் ஓட்டப்பந்தய வீரரைப் போல உற்சாகத்தில் ஓடும் முதியவர்களை பார்க்க முடிந்தது.

* மதுராந்தகம் அருகே கீழ் மருவத்தூரில் உள்ள ‘டாஸ்மாக்’ கடை முன்பு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காத்திருந்தனர்.

* தற்போது மூட்டை முடிச்சுகளுடன் வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வது போல, கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கிக்கொண்டு மதுக்கடைகள் முன்பு வரிசையில் காத்திருந்தவர்களை பார்க்க முடிந்தது.

* பச்சிளம் குழந்தையை மார்போடு அணைத்து அன்பு செலுத்தும் தாயைப்போல, மதுபாட்டில்களை நெஞ்சோடு சுமந்து அக்கறையுடன் மதுபிரியர்கள் கொண்டு சென்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan