கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியது

கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியுள்ளது.

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடமும், ரஷ்யா இரண்டாவது இடமும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan