இங்கிலாந்து பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதரர்கள் 2-வது இடம்

இங்கிலாந்து பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதரர்கள் 2-வது இடம்

2020-ம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் 2-வது இடத்திற்கு சென்றுள்ளனர்.

லண்டன் :

2020-ம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை சன்டே டைம்ஸ் என்ற முன்னணி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் 2-வது இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு சுமார் 6 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.55 ஆயிரத்து 200 கோடி) சரிந்துள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருந்தனர்.

அதேபோன்று இந்தியாவை சேர்ந்த சகோதரர்களான டேவிட் மற்றும் சிம்சன் ரூபன் சகோதரர்கள் 2.66 பில்லியன் பவுண்டுகளை (சுமார் ரூ.25 ஆயிரம் கோடி) இழந்து, கடந்த ஆண்டு பிடித்த அதே 2-வது இடத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் இங்கிலாந்தில் தொழில்கள் நலிவடைந்துள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக பங்குச்சந்தையில் இந்துஜா நிறுவனம் சரிவை சந்தித்துள்ளதே பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பெற்றதற்கு காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan